Skip to main content

Posts

Showing posts from February, 2010

துபாய் shopping festival

துபாய் shopping festival(shopping festival; விற்பனைத்திருவிழான்னே வைத்துக்கொள்ளலாம்) உலகத்தில் உள்ள மற்ற நாடுளின் வியாபாரிகள் வந்து கடை விரிக்க ஒரு இடம் திருவிழா நல்லாத்தான் இருக்கும். (இப்பொழுது முந்தைய வருடங்களில் இருந்தது போல இல்லைன்னாலும் வார இறுதியில் ஒரு முறை சென்று வரலாம்) இந்தியாவின் பகுதியில் நம் கேரளத்து கத களி உருவ பொம்மையின் முகம் மட்டும் வைத்திருந்தார்கள். இயன்ற அளவு பிற்சேர்க்கை செய்திருக்கிறேன். கருத்து தெரிவிக்க வேண்டியது காணபவர் கடமை

துபாயில் சிவராத்திரி கூட்டம்

வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு என் நணபர் வீட்டுக்கு வருகிறேன் என்றார். 10 மணிக்கு சரியாக சரவணபவன் (பர் துபாய் -Bur Dubai) வாசலில் இருப்பதாக சொன்னார். அவரை அழைத்துவர தெருவிற்கு சென்றபோது நீ...ளமான வரிசை. என்னவென்று கேட்டால் சிவராத்திரி அதான் கோவிலுக்கு போகுற வரிசைன்னாங்க. கிட்டத்திட்ட 2 கி.மீ க்கும் மேல் இருந்தது வரிசை. நண்பர் நீண்ட நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்ததால் உடனே காமிராவை தூக்கிக்கொண்டு போய் படமெடுக்க இயலவில்லை. 2 மணி நேரம் கழித்து சென்று பார்த்தேன் அப்பவும் கூட்டமாகத்தான் இருந்தது. அந்த காட்சிகளை பதித்தது இங்கே... சாதாரணமாகவே வெள்ளிக்கிழமை என்றாலே கூட்டமாகத்தான் இருக்கும் பர் துபாய். இன்னைக்கு கேட்கவே வேண்டாம். சிவனை விட சிவன் மகனுக்கு (சரவண பவனுக்குத்தான்) கொண்டாட்டம் தான்.