Skip to main content

Posts

Showing posts from January, 2009

எங்கே தற்காப்பு?

இது நம் ஊர் தொலைத்தொடர்பு பணியாளர்கள் வேலை செய்யும் விதம். இந்த பணியாளர் ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல மாலையிட்டிருக்கிறார். செருப்பு அணியக்கூடாது என்பது ஒரு அறிவியல் கண்ணோட்டத்துடன் உண்டாக்கப்பட்டது. அந்த காலத்தில் சுமார் 15 மைல் கணக்கில் கால் நடைப்பயணம் செய்ய வேண்டியிருந்தது. அதற்கான முன்னேற்பாடாக செருப்பணியாமல் இருந்தார்கள். ஆனால் இது போன்ற தொழில் செய்பவர்கள் தங்கள் உயிர் மீது கவலைப்படுவதில்லையோ? அல்லது தொலைத்தொடர்பு அல்லாமல் மின்சுற்றாக இருந்தால் செருப்பணிவார்களா? இடுப்பில் உள்ள தற்காப்பு பட்டை எங்கே? ஒரு கயிறு கூட இல்லாமல் பணி புரியும் இவர்களை குறை சொல்வதா இல்லை இவர்களின் மேலிடத்தினரை குறை சொல்வதா? குறை கண்டறிவது எளிது யார் நடைமுறை படுத்துவார்கள்?

யாரு தான் பஸ்டு ?

ஏதோ ஒரு வேலையாக துபாய் உலக வர்த்தக மையம் (Dubai World Trade Center) போக வேண்டி வந்தது. சரி புகைப்பட கருவியையும் கொண்டு போகலாமே என்ற எண்ணம் வரவே பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். இந்த மாதரி தண்ணீரில் நான் விளையாடியதில்லை. இந்த இரு சிறார்களை பார்த்த உடன் நான் குதித்த திருக்குளம் தான் ஞாபகம் வந்தது.(இதில் விளையாடும் சுகமே தனி)

கண்ணபுரம்

ஆலயம் என்றால் அமைதி வேண்டும். 9 வயதில் இரவு 7-8 மணியளவில் கூண்டு வண்டி( மேற் கூறை மூடப்பட்ட மாட்டு வண்டி)யில் இரு புறமும் தென்னை மரம் சூழ்ந்த தார் போட்ட சாலையை கடந்து கப்பி ரோடு எனப்படும் கருங்கல் செம்மண் கலந்த சாலையில் கடக்கு முடக்கு சத்தத்துடன் வண்டி நகர்ந்தது. கொஞ்சம் தூரம் சென்றதும் கடக்கு முடக்கு மறைந்தது அத்துடன் ஒரு வித வித்தியாசமான வெளிச்சம் மெர்க்குரி வெளிச்சம் சூழ மெல்ல நகருகிறது வண்டி. இது தான் கோயிலு, இது தான் குளம் (அப்பா கன்னடத்தில் சொல்லுகிறார்)வண்டிக்கு பின் புறத்திலிருந்து 5 தலைகள் எட்டிப்பாரத்தது. வெளிச்சம் சரியாக இல்லை இருட்டாக உயரமாக உள்ள கட்டிடத்தின் மேலிருந்து வெளிச்சம் வருவது மட்டும் தெரிகிறது. காலேல பாத்தா நல்லா தெரியும் மறுபடியும் அப்பா. இந்த ஊரில்தான் இனிமேல் வாசம் என்பதறியாத மூன்று முகங்கள் வே என முழித்துக்கொண்டிருந்தன. அதற்குள் இன்னும் கொஞ்சம் தூரம் சென்றது வண்டி. வண்டி நின்றதும் அப்பா பின் புறம் வந்து குறுக்குக் கம்பியை எடுத்து எல்லாம் இறங்குங்க என்றார். அதற்குள் வாங்க வாங்க என சில முகங்கள், இது வரை காணாதவை ! தயக்கத்துடன் சென்றோம் சித்தப்பாவின் வீட்டிற்குள

நம்ம ஊரு ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுன்னா அலங்காநல்லூர் ஞாபகம்தான் வருது. ஆனாலும் வேறு சில இடங்களிலும் இது நடக்கிறது.தஞ்சை நகருக்கு அருகில் மாதாகோட்டை என்ற இடத்திலும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. பல வருடங்கள் தஞ்சையிலிருந்தாலும் இது போன்ற நிகழ்ச்சிகளை காண இயலாமல் போய்விட்டது. 2008ல் நான் கண்ட ஜல்லிக்கட்டின் ஒரு காட்சி இதோ...