Skip to main content

Posts

Showing posts from October, 2008

படியெடுப்பு

படியெடுப்பு ... அப்படித்தான் வி(ள)க்கியிருக்கிறார்கள் (cloning என்கிற ஆங்கில சொல்லிற்கான தமிழ் வடிவம், விக்கிபிடீயாவிலிருந்து.(சன் டிவி யில் வரும் சிறப்புப்பார்வை ஸ்டைலில் வாசிக்கவும்) சரி இதற்கும் இப்பதிவிற்கும் என்ன தொடர்பு? கீழே பார்க்கலாம். டி வி யை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த என் நண்பனின் மகனை புகைப்படமெடுத்து படியெடுப்பு செய்ததின் விளைவு. clone என்கிற tool ஐ எடுத்து அதில் opacity 30-40% வைத்தால் இப்படி வரும். ( இடது பக்கம் மூலப்படம், வலது படியெடுத்தது). தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்

PIT - அக்டோபர், படம் பட்ட பாடு

கீழே இருக்கிற 2 படங்களத்தாங்க ஒட்னது படம் 1 படம் 2 முதல் படத்தில வண்டியோட மூஞ்சி சரியா தெரியிலையா, அதனால இரண்டாவது படத்த ஒட்ரா மாதிரி அயிடுச்சி. எதோ எனக்கு புரியிறா மாதிரி ஒட்னங்க அது நாட்டாமைக்கும் புடிச்சி போச்சி பாருங்க. இரண்டாவது படத்தின் வண்டிக்கு மேலே உள்ள பாகம் எல்லாம் க்ராப் செய்து எடுத்து விட்டேன். அடுத்த லேயராக முதல் படத்தை சேர்த்தேன். இரண்டுக்கும் இடையில் ஒரு லேயர் மாஸ்க். இரண்டாவது படத்தில் வண்டியை முதல் படம் மறைத்து விட்டது (கொஞ்சமாக) அதனால் 2 வது படத்தின் வண்டி தெரியுமளவிற்கு பெயிண்ட் அடித்து, ( நன்றி PIT மற்றும் AN& ) முதல் படத்தில் இருக்கும் மணலை க்ளோன் செய்து (2 வது வண்டியின் இடப்பக்கம்), இழுத்து மறைச்சாச்சி. வலப்பக்கத்துக்கு 1-வது படத்தில் வலப்பக்கமுள்ள மண்ணை அப்படியே கீழ் பக்கம் க்ளோன் செய்து, இன்னொரு லேயரில் விளம்பரத்திற்கான வரிகள் சேர்த்து, கொஞ்சம் கலரிங்க். அவ்ளோ தான் ஜூட். லேயர் பத்தின விவரம் இங்கே http://photography-in-tamil.blogspot.com/2008/10/blog-post.html ஆனா இந்த படத்த போடலாமான்னு கடைசி வரைக்கும் கன்பூசனாவே இருந்திச்சிங்க வாசி

அக்டோபர் மாத பிட் போட்டிக்கு

இது 2 படத்தை சேர்த்து கலக்கியது. எப்படி இருக்கிறதென்று தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் வாசி.