Skip to main content

Posts

Showing posts from February, 2012

ஓமன் நாட்டில் வரண்ட மலைமேல் சோலை

பாலைவனச் சோலை கேள்விபட்டிருக்கிறேன், பார்த்தும் இருக்கிறேன் ஆனால் மலை மேல் அதுவும் ஆண்டின் 10 மாதங்களுக்கு மேல் வரண்ட பகுதியாக இருக்கும் இந்த மலை மேல் பழத்தோட்டம் அமைத்திருக்கிறார்கள் ஓமன் நாட்டின் ஜபல் அக்ஃதர் என்னும் இடத்தில் . இங்கு மாதுளை பழம் பயிர் செய்கிறார்கள். இவ்விடத்திற்கு மழைக் காலம் முடிந்தவுடன் செல்ல வேண்டும் என சொல்கிறார் அங்குள்ள ஓட்டல் உரிமையாளர். இன்னொரு பார்க்க வேண்டிய இடம் 'வாடி குல்'(wadi ghul)இங்கு நீர் நிலை உள்ளது. இந் நீர் நிலையின் புகைப்படத்தை எங்களுக்கு ஓட்டல் உரிமையாளர் காட்டினார். புகைப்படம் நன்றாகத்தான் இருந்தது.இன்னொரு முறை செல்லவேண்டும் மழைக்காலம் முடிந்த உடன். இந்த இடம் NIZWA என்னும் இடத்திற்கு அருகில் உள்ளது. அருகில் சுற்றுலாத் தலங்கள் நிறைய உள்ளது. ஜபல் அக்ஃதர் செல்ல விரும்புவோர்கள் கண்டிப்பாக 4 WHEEL DRIVE வண்டி (ஜீப்) எடுத்துக்கொண்டுச் செல்லவேண்டும். ஓமன் நாட்டு காவல் துறையினர் இதை உறுதி செய்த பின்னரே மலை மேல் செல்ல அனுமதிக்கிறார்கள். மற்றொரு இடம் ஜபல் ஷம்ஸ் இங்கும் கண்டிப்பாக 4 WHEEL DRIVE வண்டி (ஜீப்) எடுத்துக்கொண்டுச் செல்லவேண்டும். இது

வானவேடிக்கை

துபாயில் ஆங்கில வருடப்பிறப்பன்று புர்ஜ் கலீஃபா எனப்படும் உலகத்தின் தற்போதய உயரமான கட்டிடத்தில் வானவேடிக்கை நடக்கும். இதுவரை வானவேடிக்கையை புகைப்படமெடுக்காததால் இம்முறை நடுங்கும் குளிரில் புகைப்படமெடுக்க முயற்சித்தேன் அவைகிளில் சில... மாறிக்கொண்டே இருக்கும் ஒளியின் அளவு மத்தியில் சரியாக எப்படி படமெடுப்பது என்பது இன்னும் சரியாக புரியவில்லை வாசி