Skip to main content

Posts

Showing posts from June, 2009

துபாயின் புதிய வசீகரம்

உலகத்தின் மிக உயரமான கட்டிடம் மற்றும் மிகப்பெரிய ஷாப்பிங்க் காம்ப்ளக்ஸ்! (இதற்கு தமிழ் வார்த்தை என்னவென்று தெரியாது – பண் கடை கட்டிடம்?) இரண்டும் ஒருங்கே இணைந்த இடம் இது. இங்கு மிகப்பெரிய செயற்கை நீரூற்று(fountain) உள்ளது. Burj-Dubai & Dubai Mall. இசைக்கேற்ப இந்த நீரூற்றிலிருந்து மேலே பீய்ச்சும் தண்ணீரின் அழகு தனிதான். இரவு 7 மணிக்குத்தொடங்கி 9 மணிவரை அரை மணிக்கு ஒரு முறை சுமார் 5 நிமிடம் தண்ணீர் வித விதமான கோணங்களில் உயரமாக எழும்பி நிற்கும் காட்சி என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இந்த நிகழ்ச்சியின் பொழுது 22000 காலன் (1 காலன் 3.75 லிட்டர் என நினைக்கிறேன்) தண்ணீர் காற்றில்(எந்த நேரத்திலும்) இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நீரூற்றின் உயரம் 150 மீட்டர் வரை போகும் என குறிப்பிட்டுள்ளனர் இந்த இடத்தின் சொந்தக்காரரான Emaar Properties என்னும் நிறுவனம். முக்காலி இல்லாமல் புகைப்படம் எடுக்க மிகவும் சிரமம். முடிந்த வரை எடுத்ததை இங்கே பதிவித்திருக்கிறேன் இது ஒரு கோணத்திலிருந்து இது மறு கோணத்திலிருந்து