Skip to main content

Posts

Showing posts from December, 2008

PIT டிசெம்பர் படத்தின் தாய் மற்றும் சேய்

இந்த படம் எடுக்கப்போனது ஒரு சுவாரசியமான நிகழ்வு. பள்ளிக்காலத்தில் எனக்கு ஹாக்கி விளையாட்டு மிகவும் பிடிக்கும். அந்த இடம் அப்படி. ஹாக்கி அதிகம் விளையாடும் மாவட்டமும் அதுதான் . நான் காலை உடைத்துக்கொடண்ட இடமும் அதுதான். அப்படி இருக்க, ஒரு நாள நண்பரொருவரிடம் வெள்ளி மதியம் சும்மா கலாய்துக்கொண்டிருக்கையில், இந்தியாவின் ஹாக்கி விளையாட்டு வீரர் தனராஜ் பிள்ளை வந்திருக்கிறார் என்றார். தனராஜ் பிள்ளையின் விளையாட்டை அடிக்கடி டி வி யில் பார்ப்பேன். அவரே வந்திருக்கிறார் என்றால்! மாலை வரை இருப்பார் என தெரிந்தது. உடனே வண்டி எடுத்துக்கொண்டு போனேன். அப்பொழுது எடுத்ததுதான் இந்த படம் (ங்கள்). தனராஜ் பிள்ளை மிகவும் எளிமையாகத்தான் இருந்தார். நிறைய விஷயங்கள் பேசினோம். அவ்வப்போது அவரை அழைத்து வந்த அணியினரிடம் சில ஐடியாக்களை கொடுத்தார். கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் காணப்பட்டார். ஒரு அருமையான மதிய நேரம் கடந்தது இது தாங்க தாய் படம், (இந்த கப்பு எங்க கம்பெனி அணிக்கு கிடைக்கல அது கொஞ்சம் வருத்தந்தேன்) இந்த படத்தோட நிழலை (clone)செய்து எடுக்க நினைத்தேன் மறந்தும் போய்விட்டேன். மறந்தது இது சேய். இது போட்டிக்கு. உங்க கர