Skip to main content

Posts

எங்கே தற்காப்பு?

இது நம் ஊர் தொலைத்தொடர்பு பணியாளர்கள் வேலை செய்யும் விதம். இந்த பணியாளர் ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல மாலையிட்டிருக்கிறார். செருப்பு அணியக்கூடாது என்பது ஒரு அறிவியல் கண்ணோட்டத்துடன் உண்டாக்கப்பட்டது. அந்த காலத்தில் சுமார் 15 மைல் கணக்கில் கால் நடைப்பயணம் செய்ய வேண்டியிருந்தது. அதற்கான முன்னேற்பாடாக செருப்பணியாமல் இருந்தார்கள். ஆனால் இது போன்ற தொழில் செய்பவர்கள் தங்கள் உயிர் மீது கவலைப்படுவதில்லையோ? அல்லது தொலைத்தொடர்பு அல்லாமல் மின்சுற்றாக இருந்தால் செருப்பணிவார்களா? இடுப்பில் உள்ள தற்காப்பு பட்டை எங்கே? ஒரு கயிறு கூட இல்லாமல் பணி புரியும் இவர்களை குறை சொல்வதா இல்லை இவர்களின் மேலிடத்தினரை குறை சொல்வதா? குறை கண்டறிவது எளிது யார் நடைமுறை படுத்துவார்கள்?

யாரு தான் பஸ்டு ?

ஏதோ ஒரு வேலையாக துபாய் உலக வர்த்தக மையம் (Dubai World Trade Center) போக வேண்டி வந்தது. சரி புகைப்பட கருவியையும் கொண்டு போகலாமே என்ற எண்ணம் வரவே பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். இந்த மாதரி தண்ணீரில் நான் விளையாடியதில்லை. இந்த இரு சிறார்களை பார்த்த உடன் நான் குதித்த திருக்குளம் தான் ஞாபகம் வந்தது.(இதில் விளையாடும் சுகமே தனி)

கண்ணபுரம்

ஆலயம் என்றால் அமைதி வேண்டும். 9 வயதில் இரவு 7-8 மணியளவில் கூண்டு வண்டி( மேற் கூறை மூடப்பட்ட மாட்டு வண்டி)யில் இரு புறமும் தென்னை மரம் சூழ்ந்த தார் போட்ட சாலையை கடந்து கப்பி ரோடு எனப்படும் கருங்கல் செம்மண் கலந்த சாலையில் கடக்கு முடக்கு சத்தத்துடன் வண்டி நகர்ந்தது. கொஞ்சம் தூரம் சென்றதும் கடக்கு முடக்கு மறைந்தது அத்துடன் ஒரு வித வித்தியாசமான வெளிச்சம் மெர்க்குரி வெளிச்சம் சூழ மெல்ல நகருகிறது வண்டி. இது தான் கோயிலு, இது தான் குளம் (அப்பா கன்னடத்தில் சொல்லுகிறார்)வண்டிக்கு பின் புறத்திலிருந்து 5 தலைகள் எட்டிப்பாரத்தது. வெளிச்சம் சரியாக இல்லை இருட்டாக உயரமாக உள்ள கட்டிடத்தின் மேலிருந்து வெளிச்சம் வருவது மட்டும் தெரிகிறது. காலேல பாத்தா நல்லா தெரியும் மறுபடியும் அப்பா. இந்த ஊரில்தான் இனிமேல் வாசம் என்பதறியாத மூன்று முகங்கள் வே என முழித்துக்கொண்டிருந்தன. அதற்குள் இன்னும் கொஞ்சம் தூரம் சென்றது வண்டி. வண்டி நின்றதும் அப்பா பின் புறம் வந்து குறுக்குக் கம்பியை எடுத்து எல்லாம் இறங்குங்க என்றார். அதற்குள் வாங்க வாங்க என சில முகங்கள், இது வரை காணாதவை ! தயக்கத்துடன் சென்றோம் சித்தப்பாவின் வீட்டிற்குள...

நம்ம ஊரு ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுன்னா அலங்காநல்லூர் ஞாபகம்தான் வருது. ஆனாலும் வேறு சில இடங்களிலும் இது நடக்கிறது.தஞ்சை நகருக்கு அருகில் மாதாகோட்டை என்ற இடத்திலும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. பல வருடங்கள் தஞ்சையிலிருந்தாலும் இது போன்ற நிகழ்ச்சிகளை காண இயலாமல் போய்விட்டது. 2008ல் நான் கண்ட ஜல்லிக்கட்டின் ஒரு காட்சி இதோ...

PIT டிசெம்பர் படத்தின் தாய் மற்றும் சேய்

இந்த படம் எடுக்கப்போனது ஒரு சுவாரசியமான நிகழ்வு. பள்ளிக்காலத்தில் எனக்கு ஹாக்கி விளையாட்டு மிகவும் பிடிக்கும். அந்த இடம் அப்படி. ஹாக்கி அதிகம் விளையாடும் மாவட்டமும் அதுதான் . நான் காலை உடைத்துக்கொடண்ட இடமும் அதுதான். அப்படி இருக்க, ஒரு நாள நண்பரொருவரிடம் வெள்ளி மதியம் சும்மா கலாய்துக்கொண்டிருக்கையில், இந்தியாவின் ஹாக்கி விளையாட்டு வீரர் தனராஜ் பிள்ளை வந்திருக்கிறார் என்றார். தனராஜ் பிள்ளையின் விளையாட்டை அடிக்கடி டி வி யில் பார்ப்பேன். அவரே வந்திருக்கிறார் என்றால்! மாலை வரை இருப்பார் என தெரிந்தது. உடனே வண்டி எடுத்துக்கொண்டு போனேன். அப்பொழுது எடுத்ததுதான் இந்த படம் (ங்கள்). தனராஜ் பிள்ளை மிகவும் எளிமையாகத்தான் இருந்தார். நிறைய விஷயங்கள் பேசினோம். அவ்வப்போது அவரை அழைத்து வந்த அணியினரிடம் சில ஐடியாக்களை கொடுத்தார். கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் காணப்பட்டார். ஒரு அருமையான மதிய நேரம் கடந்தது இது தாங்க தாய் படம், (இந்த கப்பு எங்க கம்பெனி அணிக்கு கிடைக்கல அது கொஞ்சம் வருத்தந்தேன்) இந்த படத்தோட நிழலை (clone)செய்து எடுக்க நினைத்தேன் மறந்தும் போய்விட்டேன். மறந்தது இது சேய். இது போட்டிக்கு. உங்க கர...

படியெடுப்பு

படியெடுப்பு ... அப்படித்தான் வி(ள)க்கியிருக்கிறார்கள் (cloning என்கிற ஆங்கில சொல்லிற்கான தமிழ் வடிவம், விக்கிபிடீயாவிலிருந்து.(சன் டிவி யில் வரும் சிறப்புப்பார்வை ஸ்டைலில் வாசிக்கவும்) சரி இதற்கும் இப்பதிவிற்கும் என்ன தொடர்பு? கீழே பார்க்கலாம். டி வி யை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த என் நண்பனின் மகனை புகைப்படமெடுத்து படியெடுப்பு செய்ததின் விளைவு. clone என்கிற tool ஐ எடுத்து அதில் opacity 30-40% வைத்தால் இப்படி வரும். ( இடது பக்கம் மூலப்படம், வலது படியெடுத்தது). தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்

PIT - அக்டோபர், படம் பட்ட பாடு

கீழே இருக்கிற 2 படங்களத்தாங்க ஒட்னது படம் 1 படம் 2 முதல் படத்தில வண்டியோட மூஞ்சி சரியா தெரியிலையா, அதனால இரண்டாவது படத்த ஒட்ரா மாதிரி அயிடுச்சி. எதோ எனக்கு புரியிறா மாதிரி ஒட்னங்க அது நாட்டாமைக்கும் புடிச்சி போச்சி பாருங்க. இரண்டாவது படத்தின் வண்டிக்கு மேலே உள்ள பாகம் எல்லாம் க்ராப் செய்து எடுத்து விட்டேன். அடுத்த லேயராக முதல் படத்தை சேர்த்தேன். இரண்டுக்கும் இடையில் ஒரு லேயர் மாஸ்க். இரண்டாவது படத்தில் வண்டியை முதல் படம் மறைத்து விட்டது (கொஞ்சமாக) அதனால் 2 வது படத்தின் வண்டி தெரியுமளவிற்கு பெயிண்ட் அடித்து, ( நன்றி PIT மற்றும் AN& ) முதல் படத்தில் இருக்கும் மணலை க்ளோன் செய்து (2 வது வண்டியின் இடப்பக்கம்), இழுத்து மறைச்சாச்சி. வலப்பக்கத்துக்கு 1-வது படத்தில் வலப்பக்கமுள்ள மண்ணை அப்படியே கீழ் பக்கம் க்ளோன் செய்து, இன்னொரு லேயரில் விளம்பரத்திற்கான வரிகள் சேர்த்து, கொஞ்சம் கலரிங்க். அவ்ளோ தான் ஜூட். லேயர் பத்தின விவரம் இங்கே http://photography-in-tamil.blogspot.com/2008/10/blog-post.html ஆனா இந்த படத்த போடலாமான்னு கடைசி வரைக்கும் கன்பூசனாவே இருந்திச்சிங்க வாசி