Skip to main content

PIT டிசெம்பர் படத்தின் தாய் மற்றும் சேய்

இந்த படம் எடுக்கப்போனது ஒரு சுவாரசியமான நிகழ்வு. பள்ளிக்காலத்தில் எனக்கு ஹாக்கி விளையாட்டு மிகவும் பிடிக்கும். அந்த இடம் அப்படி. ஹாக்கி அதிகம் விளையாடும் மாவட்டமும் அதுதான் . நான் காலை உடைத்துக்கொடண்ட இடமும் அதுதான். அப்படி இருக்க, ஒரு நாள நண்பரொருவரிடம் வெள்ளி மதியம் சும்மா கலாய்துக்கொண்டிருக்கையில், இந்தியாவின் ஹாக்கி விளையாட்டு வீரர் தனராஜ் பிள்ளை வந்திருக்கிறார் என்றார். தனராஜ் பிள்ளையின் விளையாட்டை அடிக்கடி டி வி யில் பார்ப்பேன். அவரே வந்திருக்கிறார் என்றால்! மாலை வரை இருப்பார் என தெரிந்தது. உடனே வண்டி எடுத்துக்கொண்டு போனேன். அப்பொழுது எடுத்ததுதான் இந்த படம் (ங்கள்).



தனராஜ் பிள்ளை மிகவும் எளிமையாகத்தான் இருந்தார். நிறைய விஷயங்கள் பேசினோம். அவ்வப்போது அவரை அழைத்து வந்த அணியினரிடம் சில ஐடியாக்களை கொடுத்தார். கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் காணப்பட்டார். ஒரு அருமையான மதிய நேரம் கடந்தது

இது தாங்க தாய் படம், (இந்த கப்பு எங்க கம்பெனி அணிக்கு கிடைக்கல அது கொஞ்சம் வருத்தந்தேன்) இந்த படத்தோட நிழலை (clone)செய்து எடுக்க நினைத்தேன் மறந்தும் போய்விட்டேன். மறந்தது



இது சேய். இது போட்டிக்கு.



உங்க கருத்துக்களை அள்ளி தெளிச்சிட்டுப் போங்க.

வாசி

Comments

KARTHIK said…
தன்ராஜ் பக்கத்துல இருக்குறது நீங்களா
படம் நல்லாருக்கு
சிவா said…
வாங்க கார்த்திக்,
பின்னூட்டத்திற்கு நன்றி

ஆமாங்க அது நம்ம திருமுகம்தான் படத்திலதான் அப்படி (உபயம் போட்டோஷாப்)

வாசி
தமிழ் said…
படம் அருமை
வாழ்த்துகள்

Popular posts from this blog

விடுதலைன்னா...

சொந்த மண்ணில் சோறு விளைவிக்க இயலாமல் சொர்க்க நகரத்தில் சோற்றுக்காகவும் சேமிப்பின் வீக்கத்தை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கவும் புலம் பெயரந்த, சொந்த மண் வாசனையை அனுபவிக்க ஏங்கும் ஆரறிவு? படைத்த இனம் இன்னும் ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நம் இனத்தின் கேளிக்கைக்காக, வேற்றினத்தின் வேரறிந்து புலம் பெயர்த்து ஒரு சிறு வட்டத்தினுள் அடைத்து நாமும் நம் பிற்கால சந்ததியினரும் கண்டு மகிழும் கொடுமைதான் இது. விலங்கு காட்சிச்சாலையை ஒவ்வொரு முறை காண நேரிடும்போது இந்த உணர்வுதான் ஏற்படுகிறது. ஆயிரம் மைல் பறக்கக்கூடிய இவைகளை இப்படி அடைத்து வைக்கிறோம்! ஆர்வமா கரிசனமா? ------------------------------------------------------------------------ இந்த சுதந்திரம்... இங்கே எங்கே? கலைஞர் டி.வி ல மானும் மயிலும் ஆடும். இங்க நம்ம அரசாங்கம் தான்

கருப்பு-வெள்ளை

ஜூன் மாதத்தில் ஒரு நாள் மொட்டை மாடியில் டி வி ஆன்டென்னா மாட்டிக்கொண்டிருந்தார்கள். சரியாகத்தான் மாட்டுகிறார்களா என்ற ஆர்வக்கோளாரில் மேலே சென்ற பொழுது என் கண்ணுக்கு முதலில் தெரிந்தது இந்த மேகங்கள். கருப்பும் வெள்ளையுமாய் தெரிந்த இந்த மேகங்ளுக்கு மத்தியில் கதிரவன் கண்ணா மூச்சி விளையாடிக்கொண்டிருந்தான். பொன்னிற கதிரவனை காணும் முன்பே வருணன் அளித்த வரத்தால் பொட்டி கட்ட வேண்டியதாயிற்று. நீண்ட வருடங்களுக்குப்பிறகு இத்தகைய காட்சி கண்டதும் மனம் பழைய நினைவுகளைத்தான் அசை போடுகிறது வாசி

அரபு நாட்டில் எருதுகளின் மல்யுத்தம்...

அரபு நாட்டில் எருதுகளின் மல்யுத்தமா... என்னடா பாலைவனத்து நாட்டில எருது சண்டையா? இரண்டு ஒட்டகம் னா ஒத்துக்கலாம் இது என்ன காளை முட்டிக்கொள்கிறதா! இந்த செய்திய கேட்ட பொழுது எனக்கும் இப்படித்தான் இருந்தது. பல வருடங்களாக ஐக்கிய அரபு நாடுகளின் ஒரு பகுதியான ஃபுஜைரா என்னுமிடத்தில் காளைகளை முட்டவைத்து களிக்கிறார்கள். முட்டவைத்து என்றவுடன் ஒன்றோடொன்றாக ஓடி வந்து முட்டுவதில்லை. இரு காளைகளை அருகே கொண்டு வருகிறார்கள் பிறகு காளைகள் ஒன்றையொன்று முட்டித்தள்ளுகின்றன மல்யுத்தம் போல. எந்தக்காளை அறங்குக்கு வெளியே தள்ளப்படுகிறதோ அது தோற்றதாக அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை 4;30 மணிக்கு தொடங்கி 6 மணி வரை நடக்கும் இந்த விளையாட்டைக்காண நிறைய மக்கள் வருகிறார்கள். -வாசி