Skip to main content

PIT - அக்டோபர், படம் பட்ட பாடு

கீழே இருக்கிற 2 படங்களத்தாங்க ஒட்னது

படம் 1




படம் 2




முதல் படத்தில வண்டியோட மூஞ்சி சரியா தெரியிலையா, அதனால இரண்டாவது படத்த ஒட்ரா மாதிரி அயிடுச்சி. எதோ எனக்கு புரியிறா மாதிரி ஒட்னங்க அது நாட்டாமைக்கும் புடிச்சி போச்சி பாருங்க.

இரண்டாவது படத்தின் வண்டிக்கு மேலே உள்ள பாகம் எல்லாம் க்ராப் செய்து எடுத்து விட்டேன். அடுத்த லேயராக முதல் படத்தை சேர்த்தேன். இரண்டுக்கும் இடையில் ஒரு லேயர் மாஸ்க். இரண்டாவது படத்தில் வண்டியை முதல் படம் மறைத்து விட்டது (கொஞ்சமாக) அதனால் 2 வது படத்தின் வண்டி தெரியுமளவிற்கு பெயிண்ட் அடித்து, ( நன்றி PIT மற்றும் AN& ) முதல் படத்தில் இருக்கும் மணலை க்ளோன் செய்து (2 வது வண்டியின் இடப்பக்கம்), இழுத்து மறைச்சாச்சி. வலப்பக்கத்துக்கு 1-வது படத்தில் வலப்பக்கமுள்ள மண்ணை அப்படியே கீழ் பக்கம் க்ளோன் செய்து, இன்னொரு லேயரில் விளம்பரத்திற்கான வரிகள் சேர்த்து, கொஞ்சம் கலரிங்க். அவ்ளோ தான் ஜூட்.

லேயர் பத்தின விவரம் இங்கே

http://photography-in-tamil.blogspot.com/2008/10/blog-post.html

ஆனா இந்த படத்த போடலாமான்னு கடைசி வரைக்கும் கன்பூசனாவே இருந்திச்சிங்க




வாசி

Comments

செயல்முறையை பகிர்ந்துகிட்டது சந்தோஷம்!
இக்ளூ படமும் சுவையாத்தான் இருக்கு.
//About Me
வாசி
தேடுதல் என ஒன்று இருப்பதால்தான் வாழ்கை என ஒன்றிருக்கறது //

தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்!!!

Popular posts from this blog

விடுதலைன்னா...

சொந்த மண்ணில் சோறு விளைவிக்க இயலாமல் சொர்க்க நகரத்தில் சோற்றுக்காகவும் சேமிப்பின் வீக்கத்தை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கவும் புலம் பெயரந்த, சொந்த மண் வாசனையை அனுபவிக்க ஏங்கும் ஆரறிவு? படைத்த இனம் இன்னும் ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நம் இனத்தின் கேளிக்கைக்காக, வேற்றினத்தின் வேரறிந்து புலம் பெயர்த்து ஒரு சிறு வட்டத்தினுள் அடைத்து நாமும் நம் பிற்கால சந்ததியினரும் கண்டு மகிழும் கொடுமைதான் இது. விலங்கு காட்சிச்சாலையை ஒவ்வொரு முறை காண நேரிடும்போது இந்த உணர்வுதான் ஏற்படுகிறது. ஆயிரம் மைல் பறக்கக்கூடிய இவைகளை இப்படி அடைத்து வைக்கிறோம்! ஆர்வமா கரிசனமா? ------------------------------------------------------------------------ இந்த சுதந்திரம்... இங்கே எங்கே? கலைஞர் டி.வி ல மானும் மயிலும் ஆடும். இங்க நம்ம அரசாங்கம் தான்

துபாயின் புதிய வசீகரம்

உலகத்தின் மிக உயரமான கட்டிடம் மற்றும் மிகப்பெரிய ஷாப்பிங்க் காம்ப்ளக்ஸ்! (இதற்கு தமிழ் வார்த்தை என்னவென்று தெரியாது – பண் கடை கட்டிடம்?) இரண்டும் ஒருங்கே இணைந்த இடம் இது. இங்கு மிகப்பெரிய செயற்கை நீரூற்று(fountain) உள்ளது. Burj-Dubai & Dubai Mall. இசைக்கேற்ப இந்த நீரூற்றிலிருந்து மேலே பீய்ச்சும் தண்ணீரின் அழகு தனிதான். இரவு 7 மணிக்குத்தொடங்கி 9 மணிவரை அரை மணிக்கு ஒரு முறை சுமார் 5 நிமிடம் தண்ணீர் வித விதமான கோணங்களில் உயரமாக எழும்பி நிற்கும் காட்சி என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இந்த நிகழ்ச்சியின் பொழுது 22000 காலன் (1 காலன் 3.75 லிட்டர் என நினைக்கிறேன்) தண்ணீர் காற்றில்(எந்த நேரத்திலும்) இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நீரூற்றின் உயரம் 150 மீட்டர் வரை போகும் என குறிப்பிட்டுள்ளனர் இந்த இடத்தின் சொந்தக்காரரான Emaar Properties என்னும் நிறுவனம். முக்காலி இல்லாமல் புகைப்படம் எடுக்க மிகவும் சிரமம். முடிந்த வரை எடுத்ததை இங்கே பதிவித்திருக்கிறேன் இது ஒரு கோணத்திலிருந்து இது மறு கோணத்திலிருந்து

PIT- மெகா போட்டி - 2008

PIT குழு போட்டி மெகா போட்டி எல்லாம் அறிவிச்சி கலக்கிட்டாங்கப்பா. 13 ஆம் தேதி வந்தும் படங்கள் அவ்வளவாக காணலை. எல்லாம் கடைசி ல போடலாம்னு வச்சிருக்காங்க போல. நமக்கு மறதி ஜாஸ்தி பா, அதனால மறக்குரதுக்கு முன்னாக்கவே பதிய வச்சிட்டேன் இது தாங்க படம். Jumeira beach residence னு வரிசையா கட்டடம் கட்டிப்போட்டிருக்காங்க. up market living. வெள்ளைக்காரனுங்களுக்காகவே கட்டினது போல தெரியிது. பார்த்து ஆ என்று வாயை பிளக்க மட்டும்தான் முடிந்தது என்னால்.