Skip to main content

ஓமன் நாட்டில் வரண்ட மலைமேல் சோலை

பாலைவனச் சோலை கேள்விபட்டிருக்கிறேன், பார்த்தும் இருக்கிறேன் ஆனால் மலை மேல் அதுவும் ஆண்டின் 10 மாதங்களுக்கு மேல் வரண்ட பகுதியாக இருக்கும் இந்த மலை மேல் பழத்தோட்டம் அமைத்திருக்கிறார்கள் ஓமன் நாட்டின் ஜபல் அக்ஃதர் என்னும் இடத்தில். இங்கு மாதுளை பழம் பயிர் செய்கிறார்கள்.

இவ்விடத்திற்கு மழைக் காலம் முடிந்தவுடன் செல்ல வேண்டும் என சொல்கிறார் அங்குள்ள ஓட்டல் உரிமையாளர்.



இன்னொரு பார்க்க வேண்டிய இடம் 'வாடி குல்'(wadi ghul)இங்கு நீர் நிலை உள்ளது. இந் நீர் நிலையின் புகைப்படத்தை எங்களுக்கு ஓட்டல் உரிமையாளர் காட்டினார். புகைப்படம் நன்றாகத்தான் இருந்தது.இன்னொரு முறை செல்லவேண்டும் மழைக்காலம் முடிந்த உடன். இந்த இடம் NIZWA என்னும் இடத்திற்கு அருகில் உள்ளது. அருகில் சுற்றுலாத் தலங்கள் நிறைய உள்ளது.

ஜபல் அக்ஃதர் செல்ல விரும்புவோர்கள் கண்டிப்பாக 4 WHEEL DRIVE வண்டி (ஜீப்) எடுத்துக்கொண்டுச் செல்லவேண்டும். ஓமன் நாட்டு காவல் துறையினர் இதை உறுதி செய்த பின்னரே மலை மேல் செல்ல அனுமதிக்கிறார்கள்.

மற்றொரு இடம் ஜபல் ஷம்ஸ் இங்கும் கண்டிப்பாக 4 WHEEL DRIVE வண்டி (ஜீப்) எடுத்துக்கொண்டுச் செல்லவேண்டும்.



இது தான் ஓமன் நாட்டின் மிக உயரமான இடம். ராணுவத்தின் கட்டிடம் தான் இங்கு காண்பது இங்கு ராணுவத்தினரைத் தவிற மற்றவர்கள் செல்ல அனுமதி இல்லை. இந்த புகைப்படம் எடுத்த இடத்திலிருந்து 5 கி,மீ செல்லவேண்டும் இவ்விடத்தை அடைய. (மிலிட்டரிக்காரன் தடுக்கலைன்னா ஒரு சாதனை (ஓமன் நாட்டின் மிக உயர்ந்த Plateau பார்த்திருப்பேன்)


வாசி.

Comments

Popular posts from this blog

விடுதலைன்னா...

சொந்த மண்ணில் சோறு விளைவிக்க இயலாமல் சொர்க்க நகரத்தில் சோற்றுக்காகவும் சேமிப்பின் வீக்கத்தை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கவும் புலம் பெயரந்த, சொந்த மண் வாசனையை அனுபவிக்க ஏங்கும் ஆரறிவு? படைத்த இனம் இன்னும் ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நம் இனத்தின் கேளிக்கைக்காக, வேற்றினத்தின் வேரறிந்து புலம் பெயர்த்து ஒரு சிறு வட்டத்தினுள் அடைத்து நாமும் நம் பிற்கால சந்ததியினரும் கண்டு மகிழும் கொடுமைதான் இது. விலங்கு காட்சிச்சாலையை ஒவ்வொரு முறை காண நேரிடும்போது இந்த உணர்வுதான் ஏற்படுகிறது. ஆயிரம் மைல் பறக்கக்கூடிய இவைகளை இப்படி அடைத்து வைக்கிறோம்! ஆர்வமா கரிசனமா? ------------------------------------------------------------------------ இந்த சுதந்திரம்... இங்கே எங்கே? கலைஞர் டி.வி ல மானும் மயிலும் ஆடும். இங்க நம்ம அரசாங்கம் தான்

கருப்பு-வெள்ளை

ஜூன் மாதத்தில் ஒரு நாள் மொட்டை மாடியில் டி வி ஆன்டென்னா மாட்டிக்கொண்டிருந்தார்கள். சரியாகத்தான் மாட்டுகிறார்களா என்ற ஆர்வக்கோளாரில் மேலே சென்ற பொழுது என் கண்ணுக்கு முதலில் தெரிந்தது இந்த மேகங்கள். கருப்பும் வெள்ளையுமாய் தெரிந்த இந்த மேகங்ளுக்கு மத்தியில் கதிரவன் கண்ணா மூச்சி விளையாடிக்கொண்டிருந்தான். பொன்னிற கதிரவனை காணும் முன்பே வருணன் அளித்த வரத்தால் பொட்டி கட்ட வேண்டியதாயிற்று. நீண்ட வருடங்களுக்குப்பிறகு இத்தகைய காட்சி கண்டதும் மனம் பழைய நினைவுகளைத்தான் அசை போடுகிறது வாசி

அரபு நாட்டில் எருதுகளின் மல்யுத்தம்...

அரபு நாட்டில் எருதுகளின் மல்யுத்தமா... என்னடா பாலைவனத்து நாட்டில எருது சண்டையா? இரண்டு ஒட்டகம் னா ஒத்துக்கலாம் இது என்ன காளை முட்டிக்கொள்கிறதா! இந்த செய்திய கேட்ட பொழுது எனக்கும் இப்படித்தான் இருந்தது. பல வருடங்களாக ஐக்கிய அரபு நாடுகளின் ஒரு பகுதியான ஃபுஜைரா என்னுமிடத்தில் காளைகளை முட்டவைத்து களிக்கிறார்கள். முட்டவைத்து என்றவுடன் ஒன்றோடொன்றாக ஓடி வந்து முட்டுவதில்லை. இரு காளைகளை அருகே கொண்டு வருகிறார்கள் பிறகு காளைகள் ஒன்றையொன்று முட்டித்தள்ளுகின்றன மல்யுத்தம் போல. எந்தக்காளை அறங்குக்கு வெளியே தள்ளப்படுகிறதோ அது தோற்றதாக அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை 4;30 மணிக்கு தொடங்கி 6 மணி வரை நடக்கும் இந்த விளையாட்டைக்காண நிறைய மக்கள் வருகிறார்கள். -வாசி