Skip to main content

PIT- மெகா போட்டி - 2008

PIT குழு போட்டி மெகா போட்டி எல்லாம் அறிவிச்சி கலக்கிட்டாங்கப்பா. 13 ஆம் தேதி வந்தும் படங்கள் அவ்வளவாக காணலை. எல்லாம் கடைசி ல போடலாம்னு வச்சிருக்காங்க போல. நமக்கு மறதி ஜாஸ்தி பா, அதனால மறக்குரதுக்கு முன்னாக்கவே பதிய வச்சிட்டேன்
இது தாங்க படம்.



Jumeira beach residence னு வரிசையா கட்டடம் கட்டிப்போட்டிருக்காங்க. up market living. வெள்ளைக்காரனுங்களுக்காகவே கட்டினது போல தெரியிது. பார்த்து ஆ என்று வாயை பிளக்க மட்டும்தான் முடிந்தது என்னால்.

Comments

MSATHIA said…
இரண்டு 'ஆ'
1) பக்காவா படம் புடிச்ச உங்களுக்கு
2) பக்காவா கட்டடம் கட்டி இருக்குற மேஸ்திரிக்கு.
சிவா said…
சத்தியா,
இரண்டு வா வுக்கும் நன்றி. இப்பத்தான் புகைப்படத்திற்கென்று ஒரு பதிவு ஆரம்பித்து இருக்கிறேன் வருகைக்கு நன்றி.

வாசி.
pmt said…
உங்கள் படம் மிகவும் அழகாக உள்ளது ஆனால் கட்டமைபுன்னு எதை குறிப்பிட்டு சொல்ல வர்ரிங்க பொதுவா எல்லா கட்டடதையுமா ஏதாவது ஒரு பொருள் (subject) மேல் கவனம் செலுத்தனும்.

Pmt.
goma said…
கட்டிடத்தை ,இரண்டாவது கண், மூன்றாவது கண்ணான, கேம‌ரா கொண்டு தட்டிய படம் அருமை .வெற்றியையும் தட்டிச் செல்ல வாழ்த்துக்கள்.
சிவா said…
திவா,Pmt, goma
வருகைக்கு நன்றி,
pmt: நல்ல கேள்வி, இந்த கட்டிடங்களை பார்த்தால் எல்லாம் கிட்டத்திட்ட ஒரே மாதரியான வடிவமைப்பைக் காணலாம். என்ன விசேஷம் னா, இந்த கட்டிடங்களை அமைத்த கோணம். ஒரே வரிசையில் அமைந்திருந்தால் படம் flat ஆகி இருந்திருக்கும். மேலும் இதில் உள்ள கட்டிடங்கள் பல ஒன்றோடு ஒன்றாக இணைந்துள்ளது. இங்குள்ள காவலாளிகள் கட்டிடத்தை படம் எடுக்க சில சமயம் அனுமதிப்பதில்லை. இந்த மாதிரி அடுக்கு மாடி கட்டிடங்களை இணைத்து வேறெங்காவது கட்டி இருக்கிறார்களா என்பது எனக்குத்தெரியாது. முன்னால் இருக்கும் shops are connected with back side building. இதற்கு முன்னால் இந்த மாதரியான வடிவமைப்பை நான் கண்டதில்லை.

வாசி.

Popular posts from this blog

விடுதலைன்னா...

சொந்த மண்ணில் சோறு விளைவிக்க இயலாமல் சொர்க்க நகரத்தில் சோற்றுக்காகவும் சேமிப்பின் வீக்கத்தை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கவும் புலம் பெயரந்த, சொந்த மண் வாசனையை அனுபவிக்க ஏங்கும் ஆரறிவு? படைத்த இனம் இன்னும் ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நம் இனத்தின் கேளிக்கைக்காக, வேற்றினத்தின் வேரறிந்து புலம் பெயர்த்து ஒரு சிறு வட்டத்தினுள் அடைத்து நாமும் நம் பிற்கால சந்ததியினரும் கண்டு மகிழும் கொடுமைதான் இது. விலங்கு காட்சிச்சாலையை ஒவ்வொரு முறை காண நேரிடும்போது இந்த உணர்வுதான் ஏற்படுகிறது. ஆயிரம் மைல் பறக்கக்கூடிய இவைகளை இப்படி அடைத்து வைக்கிறோம்! ஆர்வமா கரிசனமா? ------------------------------------------------------------------------ இந்த சுதந்திரம்... இங்கே எங்கே? கலைஞர் டி.வி ல மானும் மயிலும் ஆடும். இங்க நம்ம அரசாங்கம் தான்

கருப்பு-வெள்ளை

ஜூன் மாதத்தில் ஒரு நாள் மொட்டை மாடியில் டி வி ஆன்டென்னா மாட்டிக்கொண்டிருந்தார்கள். சரியாகத்தான் மாட்டுகிறார்களா என்ற ஆர்வக்கோளாரில் மேலே சென்ற பொழுது என் கண்ணுக்கு முதலில் தெரிந்தது இந்த மேகங்கள். கருப்பும் வெள்ளையுமாய் தெரிந்த இந்த மேகங்ளுக்கு மத்தியில் கதிரவன் கண்ணா மூச்சி விளையாடிக்கொண்டிருந்தான். பொன்னிற கதிரவனை காணும் முன்பே வருணன் அளித்த வரத்தால் பொட்டி கட்ட வேண்டியதாயிற்று. நீண்ட வருடங்களுக்குப்பிறகு இத்தகைய காட்சி கண்டதும் மனம் பழைய நினைவுகளைத்தான் அசை போடுகிறது வாசி

அரபு நாட்டில் எருதுகளின் மல்யுத்தம்...

அரபு நாட்டில் எருதுகளின் மல்யுத்தமா... என்னடா பாலைவனத்து நாட்டில எருது சண்டையா? இரண்டு ஒட்டகம் னா ஒத்துக்கலாம் இது என்ன காளை முட்டிக்கொள்கிறதா! இந்த செய்திய கேட்ட பொழுது எனக்கும் இப்படித்தான் இருந்தது. பல வருடங்களாக ஐக்கிய அரபு நாடுகளின் ஒரு பகுதியான ஃபுஜைரா என்னுமிடத்தில் காளைகளை முட்டவைத்து களிக்கிறார்கள். முட்டவைத்து என்றவுடன் ஒன்றோடொன்றாக ஓடி வந்து முட்டுவதில்லை. இரு காளைகளை அருகே கொண்டு வருகிறார்கள் பிறகு காளைகள் ஒன்றையொன்று முட்டித்தள்ளுகின்றன மல்யுத்தம் போல. எந்தக்காளை அறங்குக்கு வெளியே தள்ளப்படுகிறதோ அது தோற்றதாக அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை 4;30 மணிக்கு தொடங்கி 6 மணி வரை நடக்கும் இந்த விளையாட்டைக்காண நிறைய மக்கள் வருகிறார்கள். -வாசி